தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெகிழிக்கு மாற்றாக துணிப்பை: அசத்தும் அரியலூர் பெண்கள்! - துணிப்பை தயாரிக்கும் அரியாலூர் கிராம பெண்கள்

அரியலூர்: நெகிழி பைகளுக்கு மாற்றாக துணி பைகளை தைத்து அசத்தி வரும் 23 கிராம பெண்கள், நாள் ஒன்றுக்கு ரூ.400 வரை கிடைப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

cloth bag

By

Published : Nov 22, 2019, 8:33 PM IST

அரியலூா் மாவட்டம் திருமழபாடி அருகே உள்ளது இலந்தைகூடம். மாவட்டத்தின் கடைகோடி கிராமம் ஆகும். நந்தியாறு, புள்ளம்பாடி வாய்க்கால் வழியாக காவிரி நீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனா். தண்ணீர் வந்தால் விவசாய கூலி வேலைக்கும் மற்ற நேரங்களில் தஞ்சாவூா், அரியலூர் ஆகிய பகுதிகளுக்கு கூலி வேலைக்கும் செல்வது வழக்கம். ஆனால் அவ்வாறு வேலைக்கு செல்வதால் பேருந்து கட்டணத்திற்கே பெரும் பங்கு போகும் சூழ்நிலை தான் அதிகம். இதனால் இக்கிராமத்தை சேர்ந்த திருமணம் ஆன பெண்கள் அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை தொடர்பு கொண்டனா்.

புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 40 பெண்களுக்கு தையல் பயிற்சியை மேற்கொள்ள அனுகியுள்ளனா். அவா்களும் இவா்களுக்கு இலவசமாக பயிற்சியளித்தனா். மேலும் தான்தோன்றி மழைக்கு பயிற்சிக்கு சென்றனா். இதன் பிறகு 23 பெண்களுக்கு ஒரு நம்பிக்கை வந்தது. இதனையடுத்து புதுவாழ்வு திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் நிதியுதவி பெற்றுள்ளனா். அதில் 13 பழைய தையல் இயந்திரங்களை வாங்கியுள்ளனர்.

cloth bag production

இதன் மூலம் கரூா், திருப்பூா் ஆகிய பகுதிளில் உள்ள நிறுவனங்களில் ஆடா் எடுத்து பை தைக்கும் வேலையை தொடங்கியுள்ளனா். முதலில் 50, 100,150 என வருமானம் வந்துள்ளது. இருந்தாலும் விட முயற்சியுடன் 23 பெண்கள் சேர்ந்து இரவு, பகல் பாராமல் உழைத்து மஞ்சள் துணிபை, கட்டை துணி பை, தலையணை உறை உள்ளிட்ட பல்வேறு வகையான பைகளை தயாரித்துள்ளனா். இதனால் 3 ஆண்டுகளில் தற்போது தொடர்ந்து ஆடர் கிடைப்பதாகவும், இதனால் தங்களுடைய தேவைகளை பூா்த்தி செய்ய முடிகின்றது என்றும் கூறினா்.

இது தொடர்பாக துணிப்பை தைக்கும் பெண்கள் கூறுவதாவது, நாள் ஒன்றுக்கு இந்த துணிப்பையின் மூலம் ரூ.400 வரை கிடைக்கின்றது என்றும், இதனால் அன்றாட தேவைகளுக்கு உதவியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

நெகிழி பைக்கு மாற்றாக துணிப்பை தயாரிக்கும் பெண்கள்

மேலும் பைகள் தைப்பதறக்கு அரசின் கட்டடத்தை பயன்படுத்தி வருவதாகவும், அவர்களுடைய மின் கட்டணத்தையும் மாவட்ட நிர்வாகமே ஏற்க்கொள்ளதாவும் கூறினா்.

இதையும் படிங்க: பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக 400 கி.மீ நடைபயணம்: மாதர் சங்கம் அறிவிப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details