பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அறிவியல் கண்காட்சியை நடத்தியது. இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ரத்னா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
இந்தக் கண்காட்சியில் ஆரோக்கியம், சுகாதாரம், ஆற்றல், வளங்கள் மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு, நீர்வளங்களைப் பாதுகாத்தல், மறுசுழற்சிக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் 161 பள்ளிகளிலிருந்து 380 படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.