தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிப்பேருந்து லாரியின் பின்புறம் மோதி விபத்து: மூன்று மாணவர்கள் படுகாயம்! - பள்ளிப்பேருந்து விபத்து

அரியலூர்: அரியலூர் புறவழிச்சாலையில் மாணவர்களை ஏற்றிச்சென்ற பள்ளிப்பேருந்து நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்

school-bus-accident-in-ariyalur-three-students-injured

By

Published : Sep 20, 2019, 3:10 PM IST

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கீழப்பழுவூர்,அம்மா குளம் போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிப் பேருந்து அரியலூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஊதுபத்தி கீழே விழுந்துள்ளது.

அதனை எடுத்து வைக்குமாறு ஓட்டுநர் இருக்கையில் இருந்தவாறு திரும்பி மாணவர்களிடம் கூறியிக்கிறார்.அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பள்ளி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான பேருந்தின் முன்புறம்

இதில் பேருந்தில் இருந்த கிஷோர்,மாலதி,நித்யா ஆகிய மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர்.மேலும்,சில மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் காயம் அடைந்த மாணவர்களை உடனடியாக அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .பள்ளிப்பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் அறிந்து மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.இச்சம்பவம் பெற்றோர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details