தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு பரிவட்டம், பண மாலை அணிவித்து மக்கள் மரியாதை - corona virus

அரியலூர்: கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு அவ்வூர் மக்கள் பரிவட்டம், பண மாலை அணிவித்து பாராட்டியுள்ளனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு பரிவட்டம், பண மாலை அணிவித்து மக்கள் பாராட்டு
தூய்மைப் பணியாளர்களுக்கு பரிவட்டம், பண மாலை அணிவித்து மக்கள் பாராட்டு

By

Published : Apr 10, 2020, 7:22 PM IST

அரியலூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் 15 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் அவர்களின் பணியைப் பாராட்டும் வகையில் அவர்களுக்கு பல்வேறு விதங்களில் மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் அவ்வூர் மக்கள் பரிவட்டம் கட்டி கும்ப மரியாதை செய்தனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு பரிவட்டம், பண மாலை அணிவித்து மக்கள் பாராட்டு

இதனையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலகிருஷ்ணன் கிராம மக்கள் சார்பில் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் பண மாலையை அணிவித்து அவர்களைப் பாராட்டினர். மேலும், அவர்களுக்கு நோய் தொற்றாமல் இருக்க பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

இதேபோல திருமானூர் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் சார்பில் திருமானூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றக் கூடிய செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பொருள்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:செந்துறையை சுற்றி வளையம் அமைத்து பாதுகாப்பு பணி

ABOUT THE AUTHOR

...view details