தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூரில் மணல் திருடிய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

அரியலூர்: அண்ணகாரன்பேட்டை கொள்ளிடக் கரையில் அரசு அனுமதியின்றி மணல் திருடிய நபர்கள் தப்பிச் சென்ற நிலையில் ஐந்து மாட்டு வண்டிகளை மாவட்ட அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

மணல் திருடிய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் திருடிய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

By

Published : Oct 5, 2020, 2:29 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அண்ணகாரன்பேட்டை கொள்ளிடக் கரையில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிராம நிர்வாக அலுவலர் தினேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தினேஷ் தலைமையிலான மாவட்ட அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மாட்டு வண்டிகளில் மணல் திருடிக் கொண்டிருந்த நபர்கள் அலுவலர்களை பார்த்ததும் தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் அலுவலர்கள் ஐந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மணல் திருடிய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தேவமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன், ராஜேந்திரன், சதீஷ்குமார், பன்னீர்செல்வம் மற்றும் உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி உள்ளிட்டோர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அரியலூரில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details