தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை - பொதுமக்கள் குற்றச்சாட்டு

அரியலூர்: தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி நகரின் மையப்பகுதியில் சுகாதாரமற்ற முறையில் கோழி இறைச்சி கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

chicket stall
chicket stall

By

Published : Apr 6, 2020, 2:57 PM IST

தமிழ்நாட்டில், 585 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அத்தியாவசிய தேவைகள் பட்டியலில் இறைச்சிக் கடைகளை அரசு பட்டியலிட்டு உள்ளது. விற்பனை நிலையங்களை நகருக்கு வெளியே அமைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து விற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், அரியலூர் நகரின் மையப்பகுதியிலுள்ள கோழி இறைச்சிக் கடைகள் தொடர்ந்து அதே பகுதியிலேயே விற்பனையை தொடர்ந்து வருகின்றன. சுகாதாரமற்ற முறையில் இயங்கிவரும் கடைகளில் பொதுமக்கள் இறைச்சி வாங்குவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் ஆர்டர்களைப் பெற்று வீட்டுக்கே சென்று கோழி இறைச்சியை வழங்குமாறு அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால், கோழிக்கடை உரிமையாளர்கள் அதனை அலட்சியப்படுத்தியதோடு லாப நோக்கில் தங்களது விற்பனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். எனவே, இறைச்சிக் கடைகாரா்களின் இச்செயலை அலுவலர்கள் தடுத்து நிறுத்தி நகரின் புறப்பகுதியில் கோழி இறைச்சிக் கடைகளை அமைக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கரோனாவுக்கு மேலும் இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details