அரியலூர் புற வழிச்சாலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் சென்றனர். அவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், செந்துறை, கீழப்பழுவூர், தூத்தூர், விக்கிரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
அரியலூரில் கொள்ளைபோன ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்பு
அரியலூர்: பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், வெள்ளி பொருட்களை காவல்துறையினர் மீட்டனர்.
மேலும், செந்துறை, கீழப்பழுவூர், தூத்தூர், விக்கிரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 14 சவரன் நகைகள், விக்கிரமங்கலம் அருகே கருப்பசாமி கோயில் உண்டியல், சுவாமியின் வெள்ளி கலசங்களைத் திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை திறமையாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்ததை பாராட்டி, காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் அவர்களுக்கு சன்மானம் வழங்கினார்.