அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, பன்னீர்செல்வம் என்பவரின் வீட்டின் அருகே சாக்கு மூட்டை ஒன்று கட்டிய நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்ட பன்னீர்செல்வம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த காவல் அலுவலர்கள் சாக்கை திறந்து பார்த்தபோது, பிறந்து சிலமணி நேரமேயான பெண் சிசு அதில் இருந்தது. உடனடியாக அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த சிசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிறந்தவுடனே சாக்கில் கட்டி வீசப்பட்ட பெண் சிசு உயிரிழப்பு! - அரியலூர்
அரியலூர்: பிறந்தவுடன் சாக்கில் கட்டி வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் சிசு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு சாக்கில் கட்டப்பட்ட நிலையில் மீட்பு
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ட்டும் சிகிச்சை பலனின்றி பெண் சிசு உயிரிழந்தது. பெண் குழந்தை என்பதால் தூக்கி வீசப்பட்டதா? அல்லது வேறு எதேனும் காரணம் உள்ளதா? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.