தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூரில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைப்பு! - வீட்டிற்கு அனுப்பிவைப்பு

அரியலூர்: கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 36 நபர்களை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

Coronavirus
Coronavirus

By

Published : May 11, 2020, 4:40 PM IST

அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 275 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், திருச்சி அரசு மருத்துவமனையிலும் உள்ள கரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அங்கிருப்பவர்களுக்கு சத்தான உணவுகள், கபசுரக் குடிநீர் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நான்கு பேர் உள்ளிட்ட 36 பேர் இன்று (மே 11ஆம் பேர்) குணமடைந்து வீடு திரும்பினர்.

இவர்களை அரியலூர் கோட்டாட்சியர், பாலாஜி வட்டாட்சியர் சந்திரசேகரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் தகுதிச் சான்றிதழ், பழங்கள் வழங்கி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். இதன்மூலம் அரியலூர் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details