உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்களின் முதன்மையான பண்டிகை ரமலான். இஸ்லாமியர்களின் புனித மாதத்தின் இறுதியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒரு மாதம் கடுமையான விரதமிருந்து ரமலான் அன்று மசூதிகளில் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி அருகில் உள்ள அண்டை வீட்டாருடன் இணைந்து, மதங்களைக் கடந்து மனிதத்தைப் போற்றும்வகையில் ரமலான் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
ஆனால், இந்தாண்டு ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து மசூதிகளும் மூடப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக இஸ்லாமியர்கள் நோன்பு திறக்க முடியாமல் தவிக்கின்றனர்.