ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு கழகம் சார்பில், ரயில் பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூரில் நடைபெற்றது.
ரயில் பயணத்தில் கரம், சிரம், புறம் நீட்டாதீர்! - பாதுகாப்பு விழிப்புணர்வு
அரியலூர்: பயணிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு கழகம் சார்பில், படிக்கட்டுகளில் பயணம் செய்வது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
southern railway
தாரை தப்பட்டை முழங்க தொடங்கிய இந்த நிகழ்வில், படிக்கட்டுகளில் பயணம் செய்வது, ஜன்னலோரம் அமர்ந்து செல்லும் பெண் பயணிகள் பாதுகாப்பு, ரயில் நிலையங்களில் நின்று செல்பி எடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது உள்ளிட்டவை பயணிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் ரயில் நிலைய மேலாளர், ரயில்வே பாதுகாப்பு படை துணை உதவி ஆய்வாளர் சவரிமுத்து மற்றும் மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.