தமிழ்நாட்டு மக்களின் வேலைவாய்ப்புகளை பாதுகாக்கும் வகையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்து தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையிலும் ”தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டு மக்களுக்கே” எனும் ட்விட்டர் பரப்புரையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், நேற்று (ஆக. 23) மேற்கொண்டார்.
அதில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் இன்று (ஆக. 24) விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, இன்று தனது சொந்த ஊரான அங்கனூரில் திருமாவளவன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும், கிராம மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதில், ”தமிழ்நாடு அரசுப் பணியிடங்களில், தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் இடங்களில், முழு வேலைவாய்ப்பையும் தமிழர்களுக்கே வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசு வேலைகளில் வெளி மாநிலத்தவர்கள் நுழைவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு - ஒரே தேர்வு முறையை தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் ஏற்கக்கூடாது. இங்குள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலைகளை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இங்கு உள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக் கூடாது” உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க :”தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே!” - விசிக ஆர்ப்பாட்டம்