அரியலூர் மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று அன்னகாப்பு விழா கொண்டாடப்படும். அந்நாளில், புதுச்சேரி, சென்னை, தஞ்சாவூர், கடலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பிரகதீஸ்வரரை தரிசனம் செய்வார்கள்.
கங்கைகொண்ட சோழபுரம்: அன்னகாப்பு விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை! - Gangaikonda Cholapuram temple
அரியலூர்: ஊரடங்கு காரணமாக கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் அன்னகாப்பு விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
gangaikonda-cholapuram-temple
அதேபோல் இந்தாண்டும் வரும் 31ஆம் தேதி அன்னகாப்பு விழா கொண்டாப்பட உள்ளது. ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மூலவருக்கு வழக்கமான அபிஷேகங்களும, ஆராதனைகளும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா: கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பக்தர்களுக்குத் தடை