அரியலூர்: கரோனா தொற்றின் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தன. கரோனா பரவல் குறைந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
பள்ளிக்குள் புகுந்த கரோனா - அரியலூரில் 2 மாணவிகளுக்கு தொற்று உறுதி - ஈடிவி பாரத்
அரியலூரில் தனியார் பள்ளிகளில் படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அரியலூரில் 2 மாணவிகளுக்கு தொற்று உறுதி
இந்நிலையில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் வரதராஜன் பேட்டை அன்னை லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஆயத்தமாகும் 'நாம் தமிழர்' படை!