அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடி வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி நேற்று (புதன்கிழமை) வெளியிட்டார். அரியலூர் மாவட்டத்தில் 1013 ஊரக உள்ளாட்சி வாக்குச்சாவடிகளும், 62 நகராட்சி வாக்குச்சாவடிகளும் உள்ளன. இதேபோன்று, பேரூராட்சியில் 30 என மொத்தம் 92 நகர்ப்புற உள்ளாட்சி வாக்குச்சாவடிகள் உள்ளன.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி வரைவு பட்டியல் வெளியீடு! - வரைவு பட்டியல்
அரியலூர்: உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச் சாவடி வரைவு பட்டியலை அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வெளியிட்டார்.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி வரைவு பட்டியல் வெளியீடு
இதற்கான வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியலானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.