கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி மக்கள் பொழுதுபோக்கும் விதமாக வெளியே சுற்றிக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அரியலூரில் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் சாலையில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை காவல் துறையினர் மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில், அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றிவந்த மக்களை தோப்புக்கரணம், உடற்பயிற்சி, நிற்க வைத்து காவல் துறையினர் தண்டனை அளித்தனர். மேலும், 26 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது மட்டுமின்றி 19 நபர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.