தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் கோயில் உண்டியலில் பணம் திருட்டு: குற்றவாளிக்கு போலீஸ் வலை! - உண்டியல் உடைப்பு

அரியலூர்: புறவழிச்சாலையில் உள்ள ஐந்து முக விநாயகர் கோயிலின் உண்டியலை உடைத்து பணம் திருடிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

விநாயகர் கோயில் உண்டியலில் பணம் திருட்டு: குற்றவாளிக்கு போலீஸ் வலை!
Money theft

By

Published : Sep 8, 2020, 4:03 AM IST

அரியலூா் புறவழிச்சாலை கணபதி நகரில் ஐந்துமுக விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும்.

இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 7) இக்கோயிலுக்கு வந்த அர்ச்சகர், கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த உண்டியலில் அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகு-கேது பூஜையும், செப்டம்பர் 6 அன்று வருடாபிஷேகம் நடைபெற்றதால் உண்டியலில் இருந்து, சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை திருடு போயிருக்கலாம் எனத் தெரிகிறது.

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் காவல் துறையினர் திருட்டுச் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details