தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகக்கவசம் அணியாத மக்கள் - எமதர்மன் வேடத்தில் காவல்துறை விழிப்புணர்வு! - corona infection

ஊரடங்கு தளர்வை சரியான முறையில் பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் சாதாரணமாக வெளியே சுற்றும் மக்களிடம் எமதர்மன் வேடமணிந்த ஒருவரை வைத்து காவல்துறையினர் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு செய்தனர்

எமதர்மன் வேடத்தில் காவல்துறை விழிப்புணர்வு
எமதர்மன் வேடத்தில் காவல்துறை விழிப்புணர்வு

By

Published : Oct 14, 2020, 9:00 PM IST

அரியலூர்: முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்களுக்காக காவல்துறையினர் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு செய்தனர்.

கரோனா தொற்றுக் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வை அறிவித்ததால் பொதுமக்கள் தங்களது பணிக்காக இயல்பாக வெளியே வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் முகக்கவசங்கள் அணிவதில்லை.

எமதர்மன் வேடத்தில் காவல்துறை விழிப்புணர்வு

இதனால் அரியலூர் மாவட்டம் கயரலாபாத் காவல்துறையினர் வித்தியாசமான முறையில் நாடகக் குழுவினர்களை வைத்து எமதர்மன் வேடமணிந்து சாலையில் செல்பவர்களிடம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறு அணிந்து செல்லாவிட்டால் எமனின் பாசக்கயிறு உங்களை நோக்கி வரக்கூடும் என எச்சரித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: ஹத்ராஸில் தொடரும் கொடூரம் : பாலியல் வன்புணர்வுக்குள்ளான குழந்தை

ABOUT THE AUTHOR

...view details