தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு - ariyalur district news

அரியலூர்: உதவி காவல் ஆய்வாளர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

காவல் உதவி ஆய்வாளர் சடலமாக மீட்பு
காவல் உதவி ஆய்வாளர் சடலமாக மீட்பு

By

Published : Jan 11, 2021, 10:42 PM IST

அரியலூர் மாவட்டம் மதுவிலக்கு கலால் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ஜெகதீசன். இவர் தனது குடும்பத்தினருடன் தா.பழூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இவரது குடும்பத்தினர் சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றனர். இந்நிலையில் ஜெகதீசன் தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஜெகதீசன் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா போன்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் குடோனில் தூக்கிட்ட நிலையில் பிணமாகக் கிடந்த இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details