தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நான் க்ரைம் சப்-இன்ஸ்பெக்டர்...!' - ஒன்றரை லட்சம் ரூபாய் வசூல்வேட்டை - Sub Inspector

அரியலூர்: தன்னை குற்றவியல் உதவி ஆய்வாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு மூன்று பேரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வசூலித்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

போலி சப் இன்ஸ்பெக்டர்

By

Published : Aug 12, 2019, 7:48 AM IST

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் சசிகுமார். பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் உள்ள சில காவலர்கள் இவருக்கு நண்பர்களாக இருந்துள்ளார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் சென்ற சசிக்குமார் அங்குள்ள பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்.

அப்போது உதவி ஆய்வாளர் சீருடையில் சென்று, 'நான் ஒரு க்ரைம் சப்-இன்ஸ்பெக்டர், குற்றவாளியைப் பிடிக்க வந்துள்ளேன்' என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளார். கையில் வாக்கி-டாக்கியுடன் சென்றதால் அப்பகுதி மக்களும் உதவி ஆய்வாளர் என நம்பியுள்ளனர். அப்போது தனது அண்ணன் சுங்கவரித் துறையில் அலுவலராகப் பணியாற்றிவருவதாகக் கூறியுள்ளார்.

போலி சப் இன்ஸ்பெக்டர் கைது!

இதனையடுத்து குறைந்த விலையில் தொலைக்காட்சி, துணிதுவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தருவதாகக் கூறி மூன்று பேரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வசூல்செய்துள்ளார். இதில், சந்தேகமடைந்த சிலர் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், சசிக்குமாரிடமிருந்து காவல் சீருடை, தொப்பி, வாக்கி-டாக்கி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details