திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்வு மூலம், தமிழகம் முழுவதும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அரியலூர் மாவட்டத்திற்கு பரப்புரைக்காக வந்த உதயநிதிக்கு, பேருந்து நிலையம் பகுதியில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார்.
செல்லும் இடமெல்லாம் மக்களின் எழுச்சி! - உதயநிதி ஸ்டாலின் - செல்லும் இடமெல்லாம் மக்களின் எழுச்சி
அரியலூர்: செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் எழுச்சி அதிகமாக உள்ளதாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
campaign
அதைத்தொடர்ந்து தனது பரப்புரையை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எழுச்சி அதிகமாக உள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து திருமானூர், தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: ஆதரவாளர்கள் விரும்பினால் கட்சித் தொடங்குவேன் - மு.க. அழகிரி