தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு: அலட்சியப்படுத்தும் மக்கள் - corona virus prevention activities

அரியலூர்: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் போதிய விழிப்புணர்வின்றி மக்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

people doesnot obey the nation curfew
people doesnot obey the nation curfew

By

Published : Mar 25, 2020, 8:13 PM IST

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவிவரும்நிலையில், அதனை கட்டுப்படுத்தம் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து மாநில, மாவட்ட எல்லைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை தடுக்கும் விதமாக மாநில, மாவட்ட எல்லைகளில் வருவோர் முழுவதுமாக பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றது.

ஊரடங்கு உத்தரவு: அலட்சியப்படுத்தும் மக்கள்

மேலும், அத்தியாவசிய தேவைகள் இன்று பயணம் மேற்கொள்பவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுவருகின்றனர். அதுமட்டுமின்றி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், போதிய விழிப்புணர்வு இன்றி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்பவர்களிடம் காவல்துறையினர் அறிவுரை வழங்கி திருப்பிவருகின்றனர்.

கூட்டமாக வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மத்திய, மாநில அரசுகள் எச்சரித்தும் மக்கள் காய்கறி சந்தைகளில் நூற்றுக்கம் மேற்பட்டோர் திரண்டு மூட்டை மூட்டையாக வாங்கிச் சென்றிவருகின்றனர். அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்பட்டதால் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் உணவு வாங்கிச் சென்றுவருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு: அலட்சியப்படுத்தும் மக்கள்

மக்கள் கூடுவதைத் தடுக்கவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தபோதும், போதிய விழிப்புணர்வின்றி மக்கள் இயல்பாக தங்களது அன்றாட பணிகளை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதலமைச்சர் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details