தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் மருத்துவமனை  எக்ஸ்ரே ரூமில் இறந்து கிடந்த நபர் - நடந்தது என்ன? - அரியலூர்

அரியலூர் : தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி, எக்ஸ்ரே ரூமில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

patient-sucide

By

Published : Sep 30, 2019, 10:07 PM IST

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறவாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மோட்டார் ரிப்பேர் பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் தனது மனைவியுடன் சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கு மணிகண்டனுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது என மனைவியிடம் கூற, மனைவி டீ வாங்க வெளியே சென்றதாக தெரிகிறது. டீ வாங்கி வந்த கீதா தனது கணவனை மருத்துவமனை முழுதும் தேடியும் காணவில்லை எனத்தெரிகிறது.

எக்ஸ்ரே ரூமில் இறந்து கிடந்த நபர்

அப்போது, எக்ஸ்ரே ரூமில் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்று பார்த்தபோது அங்கு மணிகண்டன் இறந்துகிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர், அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

காதலியுடன் இணைந்து கடத்தல் நாடகமாடிய இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details