தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளின் சாவில் மர்மம் - பெற்றோர் புகார் - பெற்றோர் புகார்

அரியலூர்: தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர்.

parents complaint suspected death
Women suspected death

By

Published : May 31, 2020, 2:20 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர்கள் பரணி - ஜெயந்தி தம்பதி, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சில மாதங்களாக பரணிக்கும் ஜெயந்திக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து ஜெயந்தியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபின் காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நேற்று ஜெயந்தி சடலமாக கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டிற்கு வந்த ஜெயந்தியின் பெற்றோர் தங்கள் மகளின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மணப்பாறை அருகே மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details