தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவினர் கொள்ளை அடிப்பதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு! - அதிமுக

அரியலூர்: ஊராட்சி வளர்ச்சி பணிக்கு ஒதுக்கப்படும் நிதியை அதிமுகவினர் கொள்ளை அடிப்பதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்

Panchayat leaders petition ADMK to loot
Panchayat leaders petition ADMK to loot

By

Published : Aug 4, 2020, 5:48 AM IST

அரியலூர் மாவட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த 19 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஸ்ரீதேவியிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், "அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் வளர்ச்சி நிதிகள், ஒப்பந்த பணிகள் அந்தந்தப் பகுதி அதிமுக பொறுப்பாளர்களுக்கு கமிஷன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

அதிமுகவினரைத்தவிர மாற்றுக் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் போன்றவர்கள் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட அனுமதி மறுக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் ஊராட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து அதிமுகவினர் மீது குற்றம்சாட்டியது அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details