தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழை நீரில் மூழ்கிய நெல் பயிர்கள் - அரியலூர் விவசாயிகள் கவலை - நாற்றுகள் நீரில் மூழ்கி நாசமாகின

அரியலூர்: மழை காரணமாக, அரியலூர் மாவட்டத்தில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அரியலூர் விவசாயிகள் கவலை
அரியலூர் விவசாயிகள் கவலை

By

Published : Nov 18, 2020, 2:17 PM IST

அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்தை நம்பி அம்மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். ஆதலால் தற்போது விவசாயிகள் சம்பா சாகுபடியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக அவ்வபோது பெய்த மழையினால் திருமானூர் அருகே முடிகொண்டான் கிராம பகுதியில் சுமார் 30க்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின. நடவு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த நாற்றுகளும் மழை நீரில் மூழ்கின.

நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்

எனவே நாற்றுகளை கண்டறிவதில், விவசாயிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். மழை காரணமாக, பயிர்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

போதுமான வடிகால் வசதி இல்லாததே இதற்கு காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள், வடிகால் வாய்க்கால்களைத் தூர் வாரி சீரமைக்க வேண்டும் என அம்மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வட, தென் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

ABOUT THE AUTHOR

...view details