தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு தொடக்கப்பள்ளியில் கரோனா முகாம் அமைக்க எதிர்ப்பு! - Ariyalur District News

அரியலூர்: அரசு தொடக்கப்பள்ளியில் கரோனா முகாம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருவேல மரங்களை வெட்டி சாலையில் போட்டனர்.

அரசு தொடக்கப்பள்ளியில் கரோனா முகாம் அமைக்க எதிர்ப்பு
அரசு தொடக்கப்பள்ளியில் கரோனா முகாம் அமைக்க எதிர்ப்பு

By

Published : Jul 25, 2020, 5:58 PM IST

அரியலூரில் கரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இதனை சமாளிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, முகாம்களை அதிகரித்தும் வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கரோனா வார்டு அமைக்க உள்ளதாக தகவல் பரவியது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பள்ளிக்கு செல்லும் சாலையில் கருவேல மரங்களை வெட்டி சாலையில் போட்டுத்தடுத்தனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இதையும் படிங்க:பூ விற்கும் குழந்தைகளின் கரங்கள் புத்தகத்தைத் தழுவ நிதி திரட்டிய திமுக எம்பி!

ABOUT THE AUTHOR

...view details