தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி - விபத்தில் ஒருவர் பலி

அரியலூர் : வாரணவாசி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

One killed in two-wheeler head-on collision; Two injured!
One killed in two-wheeler head-on collision; Two injured!

By

Published : Sep 9, 2020, 2:21 PM IST

அரியலூர் மாவட்டம், வாரணவாசி பகுதியைச் சேர்ந்த மின்சார ஊழியர் வேல்விழியை, அவரது கணவர் விஜய் அலுவலகத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அவர்கள் வாரணவாசி அருகேவுள்ள ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த வேல்விழி, மற்றோரு இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ் குமார் ஆகியோரை அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details