தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரவு பகலாக இயங்கும் அச்சகங்கள்: கட்சி சின்னங்களை பொதுமக்களிடம் சேர்க்க துடிக்கும் வேட்பாளர்கள்! - அரியலூரில் கட்சி சின்னங்கள் வெளியீடு

அரியலூர்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது சின்னங்களை அச்சடிக்கும் பணியில் இரவு பகலாக அச்சகங்கள் செயல்பட்டு வருகிறது.

printing press
இரவு பகலாக இயங்கும் அச்சகம்

By

Published : Dec 22, 2019, 9:58 AM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் 1988 பதவிகளில் மூன்று கிராம ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் வேட்பாளர்கள் அனைவரும் அச்சகங்களில் குவிந்துள்ளனர்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தையும், தங்களுடைய புகைப்படங்களையும் இணைத்து துண்டு பிரசுரங்களும் சுவரொட்டிகளும் தயார் செய்யும் பணியில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஆறு தினங்களே உள்ளதால் பொதுமக்களை சந்திக்கும்போது தங்களுடைய சின்னங்களை அறிமுகப்படுத்த துன்டு பிரசுரங்கள் தயார் செய்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்றுகொண்டிருக்கும் அச்சக வேலை

அனைத்து மின்அச்சங்களிலும் மாலை ஆறு மணி முதல் கணினியில் டிசைன் செய்வது, செய்யப்பட்ட டிசைனை சிங்கில் கலர், மல்டிகலர் பிரசுரங்களாக அச்சடிப்பது என்று அச்சகங்களில் இரவு பகலகாக பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதனால், அனைத்து அச்சகங்களிலும் வேட்பாளர்களும் குவிந்து வருவதால் அச்சக பணியாளர்கள் கூடுதல் நேரம் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். ஃப்ளக்ஸ் தடையால் பாதிக்கப்பட்ட தங்களுடைய தொழில் உள்ளாட்சித் தேர்தலால் விரிவடைந்துள்ளதாக அச்சக உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெரும் மகிழ்ச்சியில் பணியாளர்கள்

இது குறித்து பேசிய அச்சக பணியாளர் ஒருவர், மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் பணி மேற்கொண்டு வருவதாகவும், இன்னும் பத்து நாட்களுக்கு தங்களது பணி இருக்கும் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார். மேலும், உள்ளாட்சி தேர்தலின் மூலம் கிடைத்த பணிகளால், பொங்கல் தங்களுக்கு தித்திக்கும் பொங்கலாக அமையும் என பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மக்கள் கால்களில் விழுந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு
!

ABOUT THE AUTHOR

...view details