தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குடிக்கத் தண்ணீரில்லை... குழாய் உடைப்பைச் சரி செய்யுமா நிர்வாகம்?' - குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

அரியலூர்: குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீரின்றித் தவிப்பதாக பொதுமக்கள் வேதனையாகத் தெரிவிக்கின்றனர்.

குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ஓடுகிறது
குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ஓடுகிறது

By

Published : May 30, 2020, 3:23 AM IST

அரியலூர் மாவட்டம், திருமழப்பாடியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து, செந்துறை பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் செந்துறை ஒன்றியத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைந்து வருகின்றன.

இந்நிலையில் அரியலூர் - கள்ளங்குறிச்சி சாலை அருகே செந்துறை செல்லும் சாலையில் குடிநீர் குழாயானது, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யப்படாததால், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகச் சென்றுகொண்டிருக்கிறது.

இதே போன்று மேலும் பல இடங்களில் தண்ணீர் வீணாகி வருகிறது.

குடிநீர் குழாயைச் சரி செய்யுமாறு மக்கள் வலியுறுத்தல்
தற்போது கோடைகாலத்தில் பொதுமக்கள் தண்ணீருக்கு அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில், வீணாகி செல்லும் குடிநீரை உடனடியாக, சரி செய்து பொதுமக்களுக்கு குடிக்க, குடிநீர் வழங்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதையும் படிங்க:அரசு சிமெண்ட் ஆலையில் வேலை வழங்க வேண்டும் - விவசாயிகள் நூதனப் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details