தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேவை தொடக்கம்: ரயில் நிலையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம் - அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூர் : தமிழ்நாடு அரசு நாளை (செப்டம்பர் 7) முதல் ரயில்கள் இயங்கப்படும் என அறிவித்ததை அடுத்து ரயில் நிலையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ரயில் நிலையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்
ரயில் நிலையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்

By

Published : Sep 6, 2020, 7:51 PM IST

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த ஐந்து சிறப்பு ரயில்களை தொடர்ந்து தற்போது கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து நாளை (செப்.07) முதல் ரயில் இயக்கப்பட உள்ளன.

இதையடுத்து, அரியலூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம், நடைமேடை, இருக்கைகள் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் முன்பதிவு செய்திருந்தோர் மட்டுமே ரயில்களில் பயணம் செய்ய முடியும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் அரியலூர் மார்க்கத்தில் முத்துநகர் அதிவிரைவு வண்டி கன்னியாகுமரி அறிவுடைநம்பி வைகை மற்றும் பல்லவன் அதி விரைவு வண்டிகள் இயக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க:பொதுஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்த ரயில்வே கடை உரிமையாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details