இதுகுறித்து அரியலூர் திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், “ராமதாஸ் அரசியலை சொல்லித் தரமாட்டார். மரத்தை வெட்டு, அடி, உதை, பெட்ரோல் குண்டு வீசு இதைத்தான் சொல்லித் தருவார். நாட்டைக் காப்பாற்ற திமுக தலைமை தேவை என்பதைக் கருத்தில் கொண்டு அமைந்த கூட்டணி தான் திமுக-காங்கிரஸ் கூட்டணி. மீண்டும் வேண்டாம் மோடி என்பது நமது தேர்தல் முகமாக இருக்க வேண்டும்.
'மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது!' - ஆ.ராசா - DMK candidate A. Raja
அரியலூர்: பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விமர்சித்துள்ளார்.
திமுக வேட்பாளர் ஆ.ராஜா உரை
அரசியலமைப்புச் சட்டத்தை ஒழிக்க பாஜக நினைக்கிறது. ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியுள்ள அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்தத் துடிக்கும் மத, சாதி வெறியர்களுக்கு இங்கு இடம் இல்லை. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மதிப்பிழந்த கட்சிகள். தேசத்தைக் காப்பாற்ற ராகுல் பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக கூட்டணி அமைந்துள்ளது. பாஜக, சங் பரிவார் அமைப்புகளால் தேசத்திற்குப் பேராபத்து சூழ்ந்துள்ளது. அதனை முறியடிக்க வேண்டிய இடத்தில் நாம் உள்ளோம்” என்றார்.