தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூர் மாவட்டத்தில் நகரும் நியாயவிலைக் கடைகள் தொடக்கம் - Ariyalur news

நியாயவிலைக் கடைகளில் இருந்து தொலைதூரத்தில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி, அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே ரேஷன் பொருள்களை எடுத்துச் சென்று வழங்கும் வகையில், நகரும் நியாய விலைக் கடைகள் அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் நகரும் நியாயவிலைக் கடைகள் தொடக்கம்
அரியலூர் மாவட்டத்தில் நகரும் நியாயவிலைக் கடைகள் தொடக்கம்

By

Published : Oct 5, 2020, 3:12 PM IST

அரியலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், அரசு தலைமைக் கொறடா தாமரை இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் தலைமையில் நகரும் நியாயவிலைக் கடைகள் இன்று (அக்.05) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டன.

நியாயவிலைக் கடைகளில் இருந்து தொலைதூரத்தில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி, அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே ரேஷன் பொருள்களை எடுத்துச் சென்று வழங்கும் வகையில், இந்த நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் ஆறாயிரத்து 345 குடும்ப அட்டைதாரர்களுக்கு 38 நியாயவிலைக் கடைகள் மூலம் மாதம் ஒரு முறையும், மூன்று நியாயவிலைக் கடைகள் மூலம் மாதம் இரண்டு முறையும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே ரேஷன் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மக்கள் ஏமாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details