அரியலூர் அருகே பொன்பரப்பியில் 20க்கும் மேற்பட்ட ஏழை மக்களின் வீடுகள் சுக்குநூறாக பாமகவினர் அடித்து நொறுக்கியதற்கும், அப்பாவி பொதுமக்கள் தாக்கப்பட்டதற்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களை தாக்கும் தீய சக்திகளை அழித்தொழிக்க வேண்டும்! - ஸ்டாலின் - அரியலூர் தாக்குதல்
அரியலூர்: பொன்பரப்பியில் நேற்று அப்பாவி பொது மக்கள் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களை தாக்கும் தீய சக்திகளை அழித்தொளிக்க வேண்டும்! - ஸ்டாலின்
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாவட்ட காவல் அலுவலர்கள், சமூக நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி அமைதியை நிலைநாட்ட வேண்டும், என அவர் வலியுறுத்தியுள்ளார்.