தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்' - மோடியிடம் எகிறும் ஸ்டாலின் - Stalin's campaign in Ariyalur

'ஒன்னு மட்டும் மோடிக்கு சொல்லிக்கிறேன்... இது திமுக. இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவிதுள்ளார்.

'இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்க அஞ்சமாட்டோம்' - மோடியிடம் எகிறும் ஸ்டாலின்
'இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்க அஞ்சமாட்டோம்' - மோடியிடம் எகிறும் ஸ்டாலின்

By

Published : Apr 2, 2021, 12:20 PM IST

Updated : Apr 2, 2021, 1:22 PM IST

திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "என் மகள் வீட்டில் வருமானவரித் துறையினர் 30 பேர் புகுந்து சோதனை நடத்திவருகின்றனர். தேர்தலுக்கு மூன்று நாள்கள் இருக்கும் நிலையில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி மிரட்டி அச்சுறுத்தி வீட்டில் முடக்கி வைத்துவிடலாம் என நினைக்கின்றனர்.

பரப்புரையின் போது தனது மருமகன் வீட்டில் நடைபெறும் ரெய்டு குறித்து பேசிய ஸ்டாலின்

அது திமுகவினரிடம் நடக்காது. இன்னும் ரெய்டு நடத்துங்க. நீங்க ரெய்டு நடத்த, ரெய்டு நடத்த திமுக கிளர்ந்து எழும் மிசாவையே பார்த்த நான் வருமானவரித் துறை சோதனைக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன். ஒன்னு மட்டும் மோடிக்குச் சொல்லிக்கிறேன்... இது திமுக; இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்" என்று தெரிவித்தார்.

ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்குச் சொந்தமான ஐந்து இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : Apr 2, 2021, 1:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details