தமிழ்நாடு முழுவதும் இன்று(ஜூலை.5) முதல் ஒரே மாதிரியான தளர்வுகள் அமலாகியுள்ளன. அதன்படி இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து, கோயில்கள், சுற்றுலா தலங்கள் திறப்பு என பல்வேறு செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடியில் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல், அவரே சுமார் ஒரு கி.மீ. தூரம் வரை பேருந்தை இயக்கினார்.