அரியலூர் மாவட்டம் நெரிஞ்சிக்கோரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் 19ஆம் அண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் நமது வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும், எனவே அதனை குறைப்பதற்காக துணிப்பைகளை நாம் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறி அந்தக் கிராமத்து இளைஞர்கள், பால்குடம் எடுத்த பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் 500 துணிப்பைகள், மரக்கன்றுகளை வழங்கினர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பக்தர்களுக்கு துணிப்பைகள்! - Ariyalur
அரியலூர்: நெரிஞ்சிக்கோரை கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்காக துணிப்பைகளும் மரக்கன்றுகளும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

plastic awareness
இவ்வாறு துணிப்பைகளைப் பெற்றுக் கொண்ட பக்தர்கள், இதனை பிரசாதமாக கருதுவதாகவும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இனி எங்கு சென்றாலும் துணிப்பைகளை எடுத்துச் செல்வோம் எனவும், மரக்கன்றுகள் நட்டு ஊரை பசுமையாக வைப்போம் எனவும் கூறினர்.
பக்தர்களுக்கு துணிப்பைகள் வழங்கிய இளைஞர்கள்
இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.