தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதியின் கடனை அடைத்தவர் எம்ஜிஆர் - அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேச்சு - Mgr act in engal thangam for paying karunanidhi debt

அரியலூர்: மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன், கருணாநிதி கடனை அடைத்தவர் எம்ஜிஆர் என தெரிவித்தார்.

கருணாநிதியின் கடனை அடைத்தவர் எம்ஜிஆர்
கருணாநிதியின் கடனை அடைத்தவர் எம்ஜிஆர்

By

Published : Jan 24, 2020, 5:55 PM IST

செந்துறையில் நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பேசிய குன்னம் சட்டப்பேரவை உறுப்பினரும், பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளருமான ராமச்சந்திரன், சென்னையில் கருணாநிதி தங்கியிருந்தபோது பணக் கஷ்டத்தால் தனது வீட்டை விற்கும் சூழலில் சிக்கிக்கொண்டார். அப்போது முரசொலிமாறன் மூலமாக அதனை அறிந்த எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி அவரது துணைவியார் மற்றும் அவரது குடும்பத்தினர் நடு வீதிக்கு வந்து விடக்கூடாது என்று கலைஞருக்காக ‘எங்கள் தங்கம்’ என்ற படத்தில் பணம் வாங்காமல் நடித்து கொடுத்தார். அந்தப் படத்தில் கிடைத்த வருமானம் மூலமே கருணாநிதி வீட்டை காப்பாற்றினார் என தெரிவித்தார்.

கருணாநிதியின் கடனை அடைத்தவர் எம்ஜிஆர்

மேலும், எம்ஜிஆர் எந்த படத்திலும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடித்ததில்லை எனவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவபதி, ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details