தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுஜித் மீண்டுவர மனநலம் குன்றியவர்கள் பிரார்த்தனை! - அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூர்: விளாங்குடியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் நலமுடன் மீண்டு வர வேண்டும் என மனநலம் குன்றியவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

சுஜித் மீண்டுவர பிராத்தனை செய்யும் மனநலம் பாதிக்கப்பட்டோர்

By

Published : Oct 28, 2019, 10:01 AM IST

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சுஜித் தவறி விழுந்த துயரச் சம்பவத்திலிருந்து மீண்டுவர உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள வேலா கருணை இல்லத்தில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் உயிரோடு மீண்டு வர வேண்டும் என மனநலம் குன்றியவர்கள், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

சுஜித் மீண்டுவர பிரார்த்தனை செய்யும் மனநலம் குன்றியவர்கள்

சுஜித் விரைவில் மீண்டு வரவேண்டுமென கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் ஜாதி, மத, இனப் பாகுபாடின்றி பிராத்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை தாமாக முன்வந்து மூடிய மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details