அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் கிராமத்தினைச் சேர்ந்த பட்டியிலின மக்களுக்கு மயானம் அப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு செல்வதற்கு அப்பகுதி மக்கள் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.
தற்போது, அந்த தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், சடலத்தை மயானத்திற்கு எடுத்துச்செல்ல அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இந்நிலையில், மயானத்திற்குச் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையின் கீழே பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் த. ரத்னாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.