மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளன்று மாசிமகம் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கடற்கரை, ஆறுகளிலும் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதனிடையே, மாசிமகத்தை முன்னிட்டு அரியலூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 350 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.