அரியலூர்:'காதல்' என்ற மூன்றெழுத்து மந்திரம் மனிதர்களை மட்டுமல்ல... உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் கட்டிப்போடும் வசியம் கொண்டது. காதலைப் பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லை. பேசாத பேச்சாளர்கள் இல்லை. அம்பிகாவதி - அமராவதி (Ambikapathy - Amaravathi), ரோமியோ -ஜூலியட்(Romeo-Juliet), லைலா-மஜ்னு (Laila-Majnu) என்று அமர காதல் வரிசையில் பல காதல் ஸ்டோரிகளை நாம் படித்திருக்கிறோம்.
ஒருதலை ராகம் போன்ற ஒருதலை காதல் விவகாரங்களையும், பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல், போன்ற படங்களையும் கண்டு ரசித்திருக்கிறோம். ஆனால், இணையத்திலேயே மலர்ந்த காதல் இல்லறத்தில் சேர்ந்த நிகழ்வு அரியலூர் மாவட்டத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். பொறியியல் பட்டதாரியான இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் வெல்ஜூலின். வேளாண் பட்டதாரியான இவர், நெதர்லாந்து நாட்டில் வேளாண் பண்ணையத்தில் வேலை பார்த்து வருகிறார். இணையம் வழியாக இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக சாட்டிங்கில் பேசத் தொடங்கிய இவர்கள் நாளடைவில் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தனர்.
ஒரு வழியாக நேரில் சந்தித்த காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். காதலன் விக்னேஷின் தந்தை, பெரியார் கொள்கையில் (Periyarism) தீவிர பற்று உடையவர் என்பதால் பெரியார் வழி திருமணம் தான் செய்து கொள்வேன் என்பதில் உறுதியாக இருந்தார்.