இன்ஸ்டாகிராமில் மாதாந்திர சந்தா முறை கூடிய விரைவில் வரும் என அந்நிறுவனத்தின் தலைவர் கூறியிருந்தார். தற்போது இது நடைமுறைக்கு வர உள்ளது.
மாதம் 89 ரூபாய் செலுத்தி படைப்பாளிகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயனர்கள் பார்க்க முடியும். இன்ஸ்டாகிராமில் பயனரின் பெயர் பக்கத்தில் இந்த புதிய சந்தா முறைக்கான விருப்ப மெனு இருக்கும் என்று கூறப்படுகிறது.
சந்தா கட்டியுள்ள பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் அதிலிருந்து விலகிக் கொள்ளும் வசதியையும் இன்ஸ்டாகிராம் செய்ய உள்ளது. மற்ற சமூக வலைதளங்களை போலவே தற்போது இன்ஸ்டாகிராமும் சந்தா முறையை கொண்டுவர உள்ளது.