தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனிடையே தமிழ்நாடு முழுவதும் மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக முதலமைச்சருக்கு வாழ்த்து விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
முதலமைச்சர் பழனிசாமிக்கு வழக்கறிஞர்கள் சார்பில் போஸ்டர் - Wishes posters
பெரம்பலூர்: அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில், 'அரியர் தேர்வில் அனைவரும் தேர்ச்சி' என்று ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சரை வாழ்த்தி போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது.

Lawyers who scored posters congratulating the Chief Minister
இதனிடையே பெரம்பலூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் மாணவர் சமுதாய நலனில் அக்கறை கொண்டு அரியர் மாணவர்களுக்கு ஆல்-பாஸ் வழங்கிய நிரந்தர முதலமைச்சர் உங்களை வாழ்த்தி வணங்குகிறோம் என்று வாழ்த்தி போஸ்டர் அடித்துள்ளனர். இந்த வாழ்த்து போஸ்டர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது.