அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள 57 ஆயிரத்து 165 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் திட்டத்தை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் திட்டம் தொடக்கம்! - அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா
அரியலூர்: குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் திட்டத்தை அரசு தலைமை கொறடா தொடங்கிவைத்தார்.
![குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் திட்டம் தொடக்கம்! குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் திட்டம் தொடக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:30:46:1599206446-tn-ari-01-vitamina-liquid-children-vis-scr-7206094-04092020103548-0409f-00342-25.jpg)
குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் திட்டம் தொடக்கம்
வைட்டமின் ஏ திரவமானது 39 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மூலமாக குழந்தைகளுக்கு கொடுக்கப்பட உள்ளது.
பின்னர் ஊரக உள்ளாட்சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். அனைத்து குழந்தைகளும் தவறாது வைட்டமின் ஏ சத்தை எடுத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.