அரியலூர்: மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கலின் போது மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று பகல் 12 மணியிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் பெரிய கோயில் வளாகத்தில் உள்ளூர், வெளியூர், வெளிமாநில மக்கள் திரளாக குவிய தொடங்கினர்.
காணும் பொங்கலை முன்னிட்டு களைகட்டிய கங்கைகொண்ட சோழபுரம் - சுற்றுலாப் பயணிகள்
பொங்கல் பண்டிகையின் நிறைவு நாளான காணும் பொங்கலை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
கங்கைகொண்ட சோழபுரம்
பொதுமக்கள் கோயில் வளாகப் புல் தரையில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டவாறு கோயிலின் அழகை ரசித்தபடியே காணும் பொங்கலை மிக மகிழ்ச்சியாக கொண்டாடினர். பெரியவர்கள் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். இதனால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: குதிரைக்கும் பொங்கல் - இது மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்