அரியலூரை சேர்ந்த பொதுமக்கள் சென்னை கோயம்பேடு சந்தையில் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அங்கு சந்தை மூடப்பட்டதையடுத்து ஊர் திரும்பிய 650-க்கும் மேற்பட்டவர்கள் 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள கூலி தொழிலாளர்களுக்கு காலை உணவு 11 மணிக்கும், மதிய உணவு 3 மணிக்கும், இரவு உணவு 10 மணிக்கும் வழங்கப்படுகின்றது. அதுவும் பற்றாக்குறையாகவே வழங்கப்படுகிறது.