தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் முதலாவது தடுப்புப் பணிகள் இன்று தொடங்கி மார்ச் மாதம் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோமாரி நோயானது மூன்று வகை வைரஸ்களால் இந்தியாவில் உருவாகிறது. இந்நோயைக் கட்டுப்படுத்த வேண்டி ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசி போடும் பணி 2003ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது.
கோமாரி நோய் - முதல் சுற்று தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
அரியலூர்: மாவட்டத்தில் கோமாரி நோய்க்கான முதலாவது சுற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கால் மற்றும் வாய் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும் நாக்கிலும் புண்கள் ஏற்படும். அவை உணவு உட்கொள்ள முடியாமல் பாதிக்கப்படும். வெயில் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூச்சிரைக்கும். இவையனைத்தும் கோமாரி நோய்க்கான அறிகுறிகள்.
அரியலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 362 பசுக்களுக்கும் 1,799 எருமை மாடுகள் உள்ளிட்ட ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 161 கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து தடுக்கும்பொருட்டு தடுப்பூசி முகாம் 21 நாள்களுக்குத் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரார்த்தனா, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோர் இன்று தொடங்கிவைத்தனர்.