அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் பாமக சட்டப்பேரவை முன்னாள்உறுப்பினரான மறைந்தஜெ. குருவின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இந்த நிலையில் காடுவெட்டி குருவின் ஆதரவாளர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை, காடுவெட்டி ஊராட்சி மன்றத் தலைவரும், பாமக பிரமுகருமான சின்னபிள்ளை, அவரது சகோதரர் காமராஜ் ஆகியோர் பிடித்துவைத்துள்ளனர்.
அதனால் இருசக்கர வாகனம் குறித்து காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் ஆகியோர் சின்னபிள்ளை, காமராஜிடம் கேட்கச் சென்றுள்ளனர். பேச்சுவார்த்தையின்போது காமராஜின் மகன் சதீஷுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் கனலரசன், மனோஜ், மதன் ஆகியோர் அரிவாளால் தாக்கப்பட்டுள்ளனர்.