காலிப்பணியிடங்கள்:
Block Coordinators பணிக்கு என மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Ms Office-ல் குறைந்தபட்சம் 6 மாத கணினித் திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 28.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர், 621704 என்ற முகவரியில் 30.9.2022 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க:மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு